
பூச்சோங் கன்வென்ஷன் சென்டரில் டிபி கானா நெட்வொர்க் ஏற்பாட்டில் மாபெரும் தீபாவளி சந்தை நேற்று விமரிசையாக தொடங்கப்பட்டது.
இந்த நிகழ்வை மஇகா தேசிய துணைத் தலைவர் மற்றும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம். சரவணன் அவர்கள் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் டத்தோ புத்ரி சிவம், டத்தோ டி. மோகன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

தீபாவளி சந்தையின் ஏற்பாட்டாளர் டிபி கானா உரையாற்றியபோது,
“இந்தியர்களுக்கு தீபாவளி பண்டிகைக்காக தேவையான உடைகள், பலகாரங்கள், அலங்கார பொருட்கள், பூஜை பொருட்கள் மற்றும் சாமி பொருட்கள் போன்ற அனைத்தையும் ஒரே இடத்தில் மிகக் குறைந்த விலையில் வாங்கிக்கொள்ளலாம்,” என்றார்.
அதோடு,
“பூச்சோங் மற்றும் கோலாலம்பூர் வட்டார மக்கள் அனைவரும் இங்கு வருகை தந்து இந்த தீபாவளி சந்தையை கண்டு களித்து, குறைந்த விலையில் பொருட்களை வாங்கிச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்,” என்றும் அவர் கூறினார்.