
மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கத்தின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா மாநாடு இன்று கோலாலம்பூர் ரனேசன்ஸ் தங்கும் விடுதியில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வை சங்கத் தலைவர் டத்தோ சுரேஷ் தலைமையில் நடத்தினார். உணவகத் துறையில் சிறந்த சாதனைகள் புரிந்த மூவருக்கு இவ்விழாவில் உயரிய விருதுகள் வழங்கப்பட்டன.
முதலில், உணவகத் துறையில் பல சாதனைகள் புரிந்து வருவதோடு, பிரிமாஸ் இயக்கத்திற்கு தொடக்கம் முதல் முழு ஆதரவாக இருந்து வருபவரான லோட்டஸ் குழும தலைவர் டான் ஸ்ரீ துரை சிங்கம் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

இரண்டாவதாக, நாடு முழுவதும் பல கிளைகளைக் கொண்டு உயர்தர உணவகங்களை நடத்தி வரும் பெலித்தா உணவக உரிமையாளர் டான் ஸ்ரீ ரமேஷ் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
மூன்றாவதாக, இந்தியா கேட் உணவக உரிமையாளர் சரவணன் அவர்களும் தமது சிறந்த பங்களிப்புக்காக விருதுபெற்றார்.

இந்த விருதுகள் இவர்களது சேவையையும் உணவகத் துறையில் அளித்த சிறந்த பங்களிப்பையும் பாராட்டும் வகையில் வழங்கப்பட்டதாக பிரிமாஸ் தலைவர் டத்தோ சுரேஷ் தெரிவித்தார்.