
கோலாலம்பூர் அக் 7-
இந்நாட்டில் உள்ள இந்திய மற்றும் முஸ்லிம் உணவகங்களுக்கு பிரிமாஸ் எனப்படும் மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கம் மற்றும் பெரிஸ்மா எனப்படும் மலேசிய முஸ்லிம் உணவக உரிமையாளர் சங்கம் முக்கிய பங்காற்றி உள்ளது என்று பிரிமாஸ் நிரந்தர தலைவர் டத்தோ ரெனா இராமலிங்கம் தெரிவித்தார்.
உணவகங்களுக்கு அந்நியத் தொழிலாளர்களை பெறுவதில் முட்டுக் கட்டைகள் இருந்த போதிலும் பிரிமாஸ் மற்றும் பெரிஸ்மா உள்துறை அமைச்சு – மனிதவள அமைச்சிடம் பேச்சு வார்த்தை நடத்தி தொழிலாளர்களைபெற்றுத் தந்துள்ளது.

பெரிமாஸ் பெரிஸ்மா தலைவர்கள் புத்ரா ஜெயாவுக்கு அடிக்கடி சென்று பேச்சு வார்த்தை நடத்தி வெற்றி கண்டுள்ளனர்.
புத்ரா ஜெயாவுக்கு சென்றால் அவர்கள் ஒருநாள் முழுவதும் இருந்து பேச்சு வார்த்தை நடத்துவார்கள்.
சங்கத்தின் உறுப்பினர்களுக்குநேரம் காலம் பார்க்காமல் அவர்கள் பணியாற்றி இருக்கிறார்கள்.

ஆகவே பிரிமாஸ் மற்றும் பெரிஸ்மா ஆகியவை இந்திய உணவகங்களின் தாய் வீடாக விளங்குகிறது என்று அவர் சொன்னார்.
மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கத்தின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா மாநாட்டில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.