
மலேசிய இந்திய முஸ்லிம் உணவக உரிமையாளர் சங்கமான பிரஸ்மா (PRESMA) வின் 21ஆம் ஆண்டு பொதுக்கூட்டம் நேற்று தலைநகர் ஜலான் டூத்தாவில் உள்ள மார்க்ரேட் மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வை உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவினர் துறை துணை அமைச்சர் டத்தோ டாக்டர் ஹாஜா புசியா பிந்தி சாலே அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்து உரையாற்றினார்.

அவர் தனது உரையில் கூறுகையில்,
“மலேசிய இந்திய முஸ்லிம் உணவக உரிமையாளர் சங்கத்தில் தற்போது 3,000 உறுப்பினர்கள் உள்ளனர். அதே சமயம் நாட்டில் 10,000-க்கும் மேற்பட்ட இந்திய முஸ்லிம் உணவகங்கள் செயல்பட்டு, நாட்டின் வருவாய்க்கு பெரும் பங்காற்றி வருகின்றன என்பது பாராட்டுக்குரியது,”
என அவர் தெரிவித்தார்.

மேலும்,
“உணவகத் துறை தற்போது 99 பில்லியன் ரிங்கிட் வருவாயை எட்டியுள்ளது. இது மலேசிய பொருளாதாரத்தில் முக்கிய பங்களிப்பாகும். மடானி அரசாங்கத்திற்கு பிரஸ்மா அளித்து வரும் தொடர்ந்த ஆதரவு பெருமை அளிப்பதாகும்,”
என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்நிலையில், மலேசிய இந்திய முஸ்லிம் உணவக உரிமையாளர் சங்கத்தின் புதிய தலைவராக டத்தோ முகமத் மொசின் பின் அப்துல் ரசாக் தேர்வு செய்யப்பட்டார்.
அவருக்கு சங்கத்தின் முன்னாள் தலைவர் மற்றும் தாமரை குழுமத்தின் நிர்வாக இயக்குநரான டான் ஸ்ரீ ராமலிங்கம் வாழ்த்துகளை தெரிவித்தார்.

அதேபோல், பிரபல உணவக நிறுவனமான பெலித்தா குழுமத்தின் உரிமையாளர் டான் ஸ்ரீ ரமேஷ் (முருகன்) அவர்களுக்கு துணை அமைச்சர் சிறப்பு விருது வழங்கினார்.