
மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பக்காத்தான் ஹரப்பான் உறுப்புக் கட்சிகளுடன் இணைந்து தொகுதி ஒதுக்கீடு குறித்து வரும் செவ்வாய்க்கிழமை முடிவுச் செய்யப்படும் என்று மாநில முன்னாள் முதல்வர், அட்லி ஸாஹாரி தெரிவித்தார். இத்தேர்தலில் பக்காத்தானைப் பிரதிநிதித்து தேர்வுச் செய்யப்படும் வேட்பாளர்கள் குறித்தும் இறுதி முடிவெடுக்கப்படும். இம்முறை அமானா கட்சி 8 முதல் 10 தொகுதிகள் வரை போடியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இன்னும் சில தொகுதிகள் குறித்து இறுதி முடிவெடுக்கப்படாமல் இருப்பதால் பக்காத்தான் கூட்டணிக் கட்சிகளுடன் தொடர் பேச்சுவார்த்தைகளை நாங்கள் நடத்த இருக்கிறோம் என்றார் அவர்.
