27.9 C
Kuala Lumpur
Thursday, April 23, 2026

Vetri

அந்நியத் தொழிலாளர் பிரச்னை கட்டம் கட்டமாகத் தீர்க்கப்படும்! டத்தோ ஸ்ரீ சரவணன் அறிவிப்பு

நாட்டில் பல தொழில் துறைகளில் நிலவும் அந்நியத் தொழிலாளர் பிரச்னை கட்டம் கட்டமாகத் தீர்க்கப்படும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம் சரவணன் தெரிவித்தார் இந்திய வர்த்தகர்களின் அந்நியத் தொழிலாளர் பிரச்னைகள் விரைந்து தீர்த்து வைக்கப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். லெபோ அம்பாங் இந்திய வர்த்தகர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற தீபாவளி அன்பளிப்பு நிகழ்ச்சிக்கு தலைமைதாங்க வந்த மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ சரவணிடம், அச்சங்கத்தின் தலைவர் டத்தோ அப்தூல் ரசூல் 2 மகஜர்களை வழங்கினார். ஒன்று லெபோ அம்பாங் வர்த்தகர்கள் எதிர்நோக்கும் அந்நியத் தொழிலாளர் பிரச்னை, மற்றொன்று மலேசிய இந்திய நகக்கடை பொற்கொல்லர் சங்கத்தின் சார்பில் அதே பிரச்னை தொடர்பாக மகஜர் வழங்கினார் .

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles