
வரும் நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள இந்து பெருமக்கள் கோவில்களில் சாமி கும்பிட அனுமதி வழங்கப்ட்டிருப்பதாக சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார். இரண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே கோயிலுக்கு செல்ல அனுமதி. 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று அவர் சொன்னார். Sop விதிமுறைகளை பின்பற்றி சிலாங்கூர் மாநில இந்து பெருமக்கள் தீபாவளி தினத்தில் கோயில்களுக்கு செல்ல ஒற்றுமை துறை அமைச்சு அனுமதி வழங்கி இருப்பதாக குறிப்பிட்ட அவர் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே மக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றார் அவர்.



