29 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

பரா மலேசிய ஓட்டப்பந்தய சங்கத்தின் துணைத் தலைவராக டத்தோ அண்ணாமலை தேர்வு

🔥 Views : 11
👁 Reading Now : 24

மாற்றுத்திறனாளிகள் எனப்படும் பரா மலேசிய ஓட்டப்பந்தய சங்கத்தின் துணைத் தலைவராக டத்தோ ஆர் அண்ணாமலை போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். கடந்த வாரம் பரா மலேசிய ஓட்டப்பந்தய சங்கத்தின் ஆண்டு கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவராக முகமட் ஷாவின் ரவி தேர்வு செய்யப்பட்டார். இதில் துணைத் தலைவராக பகாங் மாநிலத்தைச் சேர்ந்த டத்தோ ஆர் அண்ணாமலை போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். மலேசிய இந்திய விளையாட்டு பேரவையின் உதவித் தலைவராக இருக்கும் டத்தோ ஆர் அண்ணாமலை, பகாங் மாநில ஓட்டப்பந்தய சங்கத்தின் தலைமை செயலாளராக பொறுப்பேற்றுள்ளார். மேலும் பகாங் மாநில இந்தியர் விளையாட்டு பேரவையின் தலைவராகவும் இவர் பொறுப்பு வகிக்கிறார். விளையாட்டுத்துறையில் 40 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் பெற்ற டத்தோ ஆர் அண்ணாமலை பகாங் குவாந்தான் ரோட்டரி கிளப் தலைவராக இருந்து ஏழை மக்களுக்கும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் மிகப் பெரிய அளவில் உதவி புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles