
நீர்ப்பாசன -வடிகால் துறையின் ஊழியர்களைக் கடுமையாக திட்டியதற்காக , Kota Kemuning சட்டமன்ற உறுப்பினர் வி.கணபதிராவ் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். Taman Sri Muda – வில் வெள்ள நிலவரத்தை கண்காணிக்கச் சென்றிருந்த போது, நீர்ப்பாசன -வடிகால் துறையின் அதிகாரிகளை வி. கணபதிராவ் திட்டும் காணொளி வைரலாகி , பல்வேறு தரப்புகளின் மாறுபட்ட கருத்தினை பெற்றது. எனது அதிகாரத்தைக் காட்டிக் கொள்வதற்காக அவ்வாறு நடந்து கொள்ளவில்லை; மாறாக அத்தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகவே தாம் செயல்பட்டதாக கணபதி ராவ் கூறினார்.
