31.6 C
Kuala Lumpur
Friday, September 18, 2026

Vetri

மித்ரா நிதியில் 8 கோடியே 90 லட்சம் வெள்ளியை யார் யாருக்கு கடன்களை அடைக்க பயன்படுத்தப்பட்டது?

🔥 Views : 42
👁 Reading Now : 33

கடந்த இரண்டு ஆண்டுகளாக மித்ரா நிதியிலிருந்து 8 கோடியே 90 லட்சம் வெள்ளி கடன்களை அடைக்க பயன்படுத்தப்பட்டதாக கூறும் ஒற்றுமை துறை அமைச்சர் ஹலிமா, இதில் யார் யாருக்கு எவ்வளவு கடன்கள் அடைக்க பணம் கொடுக்கப்பட்டது என்பதை ஒளிவுமறைவின்றி அறிவிக்கவேண்டும் என்று பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி சிவகுமார் கோரிக்கை விடுத்துள்ளார். 2020 ஆம் ஆண்டில் 10 கோடி வெள்ளியில் மித்ராவுக்கு 6 கோடியே 50 லட்சம் மட்டுமே கிடைத்தது. மீதமுள்ள 3 கோடியே 50 லட்சம் கடன்களை அடைக்க பயன்படுத்தப்பட்டது. மேலும் 2021 இல் மித்ராவுக்கு 10 கோடி கிடைக்கவில்லை. வெறும் 4 கோடியே 10 லட்சம் வெள்ளி மட்டுமே கிடைத்தது. 5 கோடியே 90 லட்சம் வெள்ளி கடன்களை அடைக்க பயன்படுத்தப்பட்டது என்று அமைச்சர் ஹலிமா குறிப்பிட்டிருக்கிறார். அப்படி என்றால் இந்த இரண்டு ஆண்டுகளில் மித்ரா நிதியில் இருந்து 8 கோடியே 90 லட்சம் வெள்ளி யார் யாருக்கு கடன்களை அடைக்க பயன்படுத்தப்பட்டது என்பதை ஒளிவுமறைவின்றி அவர் அறிவிக்க வேண்டும் என்று சிவகுமார் கேட்டுக்கொண்டார். 2022 புதிய பட்ஜெட்டிலும் மித்ராவுக்கு ஒதுக்கப்படும் நிதி அப்படியே கடன்களை அடைக்க பயன்படுத்தப்படுமா? என்றும் அவர் கேள்விக்கணைகளை முன்வைத்திருக்கிறார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles