31.4 C
Kuala Lumpur
Thursday, July 16, 2026

Vetri

நாட்டை உலுக்கிய மித்ரா நிதி மோசடி தொடர்பில் நிறுவனங்களைச் சேர்ந்த 16 இயக்குனர்கள் கைது

🔥 Views : 28
👁 Reading Now : 23

2018 ஆம் ஆண்டிலிருந்து இவ்வாண்டு இதுவரையில் மித்ரா நிதியை பெற்று மோசடி செய்ததாக நம்பப்படும் நிறுவனங்களின் இயக்குனர்கள் 16 பேரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் அதிரடியாக கைது செய்துள்ளதாக அதன் தலைவர் டத்தோஸ்ரீ அசாம் பாக்கி தெரிவித்தார்.. 24 வயதிலிருந்து 68 வயதுக்குட்பட்ட இவர்கள் அனைவரும் நேற்று மாலை முதல் கிள்ளான் பள்ளத்தாக்கில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையில் கைது செய்யப்பட்டதாக சொன்னார். பணத்தைப் பெற்று நிகழ்வுகளை நடத்தாதது, நடத்திய நிகழ்வுகளுக்கு கணக்கறிக்கை இல்லாதது போன்றவை உட்பட பெரும்பாலான பணங்கள் சம்பந்தப்பட்டவர்கள் தங்களின் சொந்தத்திற்கு பயன்படுத்திக் கொண்டுள்ளனர் என்றார். விரைவில் அனைவரும் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர் என்றார். 2018 -நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியில் மித்ரா பிரதமர் இலாகாவின் கீழ்வைக்கப்பட்டிருந்தத. 2020 முதல் இன்று வரையில் ஒற்றுமைத்துறை அமைச்சின் கீழ் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏழை இந்திய சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட 10 கோடி வெள்ளி மித்ரா நிதி ஒதுக்கீடு குறிப்பிட்ட வர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டது தொடர்பில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles