
மலேசிய குடும்ப ம் எனப்படும் அரசாங்கம் கூறியுள்ள மலேசிய குடும்பத்தில் , தாங்கள் அனைவருக்கும் இடமுள்ளது எனும் நம்பிக்கை மலேசியர்ளுக்கு ஏற்பட வேண்டும் என்று , துணை பேரரசர் சுல்தான் நஸ்ரின் ஷா கேட்டுக் கொண்டுள்ளார். மாற்று கருத்துகளையும் மாற்று அணுகுமுறைகளையும் ஏற்று கொண்டு , வேற்றுமைகளில் ஒற்றுமை காணும் வெளிப்படை போக்கு, மலேசிய குடும்ப உணர்வில் பிரதிபலிக்கப்பட வேண்டும். நாட்டில் அனைவரது குரல்களும் ஒலிப்பதற்கு இடமளிக்க வேண்டும். ஒடுக்கும் குரலே பின்னர் வெறுப்புணர்வை கக்கும் ஆபத்தான குரலாக உருவெடுக்கக் கூடும் என்று இடைக்காலமாக பேரரசர் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டிருக்கும் சுல்தான் நஸ்ரின் இவ்வாறு தெரிவித்தார்.



