
கழுத்தில் துப்பாக்கிச் சூட்டுடன் ஒரு போலீஸ்காரர் பெக்கான் மூவாரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மரணமுற்ற நிலையில் காணப்பட்டார். அவரது காரில் ஒரு துப்பாக்கியும் கண்டுபிடிக்கப்பட்டதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர், டத்தோ அயூப் கான் மைடின் பிச்சை தெரிவித்தார். லான்ஸ் காப்பரல் தகுதிக் கொண்ட அவரது சடலம் காலை 11.18 மணிக்கு அங்குள்ள வாகன நிறுத்துமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. 29 வயதுடைய அவர், மூவார் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் பணியாற்றியவராவார் என்றார்.
