31.8 C
Kuala Lumpur
Monday, June 15, 2026

Vetri

கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் 400 குடும்பங்களுக்கு தீபாவளி அன்பளிப்புகள்

🔥 Views : 7
👁 Reading Now : 49

தீபாவளி திருநாளை முன்னிட்டு தலைநகர் லிட்டில் இந்தியாவில் 400 குடும்பங்களுக்குத் தீபாவளி உதவிப் பொருட்களை கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தகச் சங்கம் வழங்கியது.
கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தின் தலைவர் டத்தோ ஆர் இராமநாதன் மற்றும் துணைத் தலைவர் தமிழ்ச் செல்வம் தலைமையில் நேற்று முன்தினம் 400 குடும்பங்களுக்கு தீபாவளி அன்பளிப்புகள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சிக்கு மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் சிறப்பு வருகை புரிந்தார்.
கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தகச் சங்கத்தின் தலைவர் டத்தோ ஆர் இராமநாதன் கூறுகையில் ஆண்டு தோறும் நாங்கள் இப்படிப்பட்ட நற்பணிகளைச் செய்து வருகிறோம்.
இவ்வாண்டு 400 குடும்பங்களுக்கு தீபாவளி அன்பளிப்புகள் வழங்கி இருப்பதாக அவர் சொன்னார்.
வரும் அக்டோபர் 30 ஆம் தேதி கிள்ளானிலும் 400 குடும்பங்களுக்கு தீபாவளி அன்பளிப்புகள் வழங்கப்படும என்று டத்தோ ராமநாதன் தெரிவித்தார்.
நாட்டில் புகழ்பெற்ற மார்டன் ஸ்டோர், ஸ்ரீ குமரன் பட்டு மாளிகை மற்றும் போலிவூட் நிறுவனங்கள் இதற்கு முழு ஆதரவு வழங்கி இருப்பதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வம் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles