
கெடாவின் ஒரு பகுதியான பினாங்கை பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு அடகு வைத்த ஒப்பந்தத்தை மதித்து மத்திய அரசாங்கம் ஆண்டுதோறும் 10 கோடி வெள்ளியை கெடாவுக்கு வழங்க வேண்டும் என்று மந்திரி பெசார் முகமட் சனுசி கேட்டுக் கொண்டிருப்பதை துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி சாடினார். பினாங்கை பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் கெடா மாநிலம் அடகு வைத்தற்கான எந்த ஒரு தெளிவான ஒப்பந்தமும் இல்லை. மேலும் பினாங்கு மாநிலமும் எந்த கட்டணத்தையும் செலுத்தாது. கெடாவின் எந்த ஒரு கோரிக்கைக்கும் மத்திய அரசு செவி சாய்க்கக் கூடாது என்று டாக்டர் இராமசாமி கேட்டுக் கொண்டார்.