
மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் சொந்த சின்னத்தில் போட்டியிட்டால் பாஸ் கட்சியுடன் அம்னோ ஒத்துழைக்கும் என்று அம்னோ தலைமைச் செயலாளர் டத்தோ அமாட் மஸ்லான் தெரிவித்தார். பாஸ் கட்சி தனது சொந்த சின்னத்தில் போட்டியிட்டால் மட்டுமே அந்த கட்சியுடன் ஒத்துழைக்க தயார் என்று அவர் சொன்னார். இம்முறை மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் பெரிக்கத்தான் நேஷனல் சின்னத்தில் போட்டியிட பெர்சத்து பாஸ் கெராக்கான் முடிவு செய்துள்ளது என்று அதன் தலைவர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் ஏற்கனவே அறிவித்துள்ளார்.
