
2022 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தமிழ் மற்றும்சீனப் பள்ளிகளின் மேம்பாட்டிற்கு 12 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கோவிட் -19 காலக்கட்டத்தில் தங்களது பங்களிப்பை வழங்கிய ஆசிரியர்களைப் பாராட்டும் விதமாக 100 வெள்ளி வழங்கப்படுவதாக நிதி அமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு ஷாஃப்ரோல் தெரிவித்தார். இதனிடையே உயர் கல்வி மாணவர்களுக்கு உதவும் வகையில், பி 40 பிரிவைச் சேர்ந்த 6 லட்ச மாணவர்களுக்கு TABLET ரக கணிணி வழங்கப்படுவதாகவும், இதற்காக அரசாங்கம் 45 கோடி வெள்ளி நிதியை ஒதுக்கியுள்ளதாகவும் நிதி அமைச்சர் தெரிவித்தார்!
