31.8 C
Kuala Lumpur
Monday, June 15, 2026

Vetri

கோலக்குராவ் சட்டமன்றத் தொகுதி இந்தியர்களின் நலனில் அக்கறைக் கொள்வேன்

🔥 Views : 7
👁 Reading Now : 43

பேரா கோலக்குராவ் சட்டமன்றத் தொகுதியில் வசிக்கும் இந்தியர்களின் நலனுக்கும்,மேம்பாட்டிற்கும் எந்தவொரு பாகுபாடுமின்றி தேவையான உதவிகள் செய்து தரப்படும். அவற்றில் முக்கியமான அடிப்படை வசதிகள் மற்றும் சலுகைகளும் அடங்குமென கோலக்குராவ் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டத்தோ அப்துல் யூனுஸ் ஜம்ஹாரி கூறினார். பல்வேறு உதவிகளைக் கேட்டு வரும் இந்தியர்களுக்கு தம்மால் இயன்ற உதவிகளை செய்து வருகிறேன். இதில் கல்வி,சமூக நலன்,சுகாதாரம் போன்றவற்றிற்கான உதவிகளும் அடங்குமென அவர் சொன்னார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொகுதியில் தேர்தெடுக்கப்பட்ட 80 குடும்பங்களுக்கு உதவிப் பொருட்களை அவர் வழங்கினார். ஆலயத் தலைவர் எஸ்.ஓ.அப்பன் மற்றும் நிர்வாகத்தினர் ஏற்பாட்டில் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles