
அடுத்த மாதத்தில் நடைபெறவிருக்கும் மலாக்கா சட்டமன்றத் தேர்தலில் தாம் போட்டியிடுவதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பை பெர்சத்து கட்சித் தலைமைத்துவத்திடம் விட்டு விடுவதாக மஸ்ஜிட் தானா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ மாஸ் எமிர்யாத்தி தெரிவித்தார். இங்குள்ள சட்டமன்றத் தொகுதிகளில் ஒரு தொகுதியில் போட்டியிடவிருப்பதாக என் பெயர் குறிப்பிடப்பட்டாலும் தற்போதைக்கு என் கவனம் முழுவதும் நாடாளுமன்ற உறுப்பினர், பிரதமர் துறையின் துணை அமைச்சர் பொறுப்புகளில்தான் உள்ளது. இதுவரை எதுவும் குறிப்பிடப்படவிலை. இதற்கு அடிமட்ட உறுப்பினர்கள் தற்போதைய நிலையை விரும்பாததும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றார்.
