
மலாக்கா மாநிலத்தில் ஆட்சி கவிழ்ந்து போனதற்கு அம்னோ கட்சியை குறை சொல்ல வேண்டாம் என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் சுட்டிக்காட்டினார். மலாக்கா மாநில முதல்வருக்கு வழங்கிய ஆதரவை மீட்டுக் கொண்ட 4 சட்டமன்ற உறுப்பினர்கள் முன்கூட்டியே எதிர்க்கட்சியை சந்தித்து உள்ளனர். ஆகவே மலாக்காவில் ஆட்சி கவிழ்ந்து போனதற்கு அம்னோ காரணம் அல்ல என்று அவர் குறிப்பிட்டார்.



