
மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் மீண்டும் காடேக் சட்டமன்ற தொகுதியில் ஜி. சாமிநாதன் போட்டியிடும் வாய்ப்பு மிக பிரகாசமாக இருக்கிறது. 2018 இல் நடைபெற்ற தேர்தலில் ஜசெக சார்பில் காடேக் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர் தொகுதி மக்களுக்கு அவர் சிறப்பாக பணியாற்றி வருகிறார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வசதி குறைந்த மக்களுக்கு உதவிகளை வழங்கி வாழ்த்துக்களை கூறி வருகிறார். காடேக் சட்டமன்ற மக்களிடையே இவருக்கு மிகப்பெரிய இருப்பதாக வர்ணிக்கப்படுகிறது.



