29 C
Kuala Lumpur
Tuesday, September 29, 2026

Vetri

பெரிக்கத்தான் நேஷனல் சின்னம் தொடர்பில் அம்னோ – பெர்சத்து இடையே நேரடி வாய்ச்சண்டை

🔥 Views : 66
👁 Reading Now : 47

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் பெர்சத்து கட்சி ஆட்டம் கண்டு இருப்பதால் பெரிக்கத்தான் நேஷனல் சின்னத்தில் போட்டியிட பயப்படுகிறது என்று சிலாங்கூர் மாநில அம்னோ இளைஞர் பிரிவு கடுமையாக சாடியுள்ளது. இதற்கு பதிலடியாக சிலாங்கூர் மாநில பெர்சத்து கட்சி இளைஞர் பிரிவு தலைவர் கைய்டிர் இது ஒரு கட்டுக்கதை என்றார். மலாக்காவில் புதிய தேர்தல் நடத்துவதற்கு அம்னோதான் காரணம். அந்த அம்னோ கட்சியை மலாய் வாக்காளர்கள் ஏற்றுக் கொள்கிறார்களா? இன்று மலாய் வாக்காளர்கள் உடைந்து இருப்பதற்கு யார் காரணம் என்று அவர் கேள்வியை எழுப்பியுள்ளனர். தற்போது மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பெர்சத்து மற்றும் அம்னோ இடையே நேரடி பலப்பரிட்சை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles