34.8 C
Kuala Lumpur
Tuesday, September 29, 2026

Vetri

மலேசிய தெலுங்கு சங்கம், மைபிபிபி ஏற்பாட்டில் 100 சிறார்களுக்கு தீபாவளி புத்தாடைகள்

🔥 Views : 48
👁 Reading Now : 61

தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வசதி குறைந்த 100 சிறார்களுக்கு மலேசியத் தெலுங்கு சங்கம் மற்றும் பிபிபி ஏற்பாட்டில் புத்தாடைகள் வழங்கப்பட்டன. பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் புகழ்பெற்ற பாலிவுட் டெக்ஸ்டைல்ஸ் ஆதரவில் நேற்று 100 சிறார்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சத்தியா சுதாகரன் தெரிவித்தார். விலாயா மாநிலத்தைச் சேர்ந்த துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஜலாலுடின் அலியாஸ், பிபிபி தலைவர் டத்தோஸ்ரீ மெக்லின், மலேசிய தெலுங்கு சங்கத்தின் தலைவர் டாக்டர் வெங்கெட் பிரதாப், போலிவூட் டெக்ஸ்டைல்ஸ் தலைவர் முகமட் ராபி மற்றும் மலேசிய தெலுங்கு சங்கத்தின் முன்னாள் தலைவர் டத்தோ டாக்டர் அட்சயக் குமார் ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles