
நவம்பர் 4 ஆம் தேதி கொண்டாடப்படும் தீபாவளி பொருநாளை முன்னிட்டு பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா தீபாவளிச் சந்தையை பிரதமர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நேற்று மாலை சிறப்பு வருகை புரிந்து தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ எம் சரவணனும் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் தீபாவளி சந்தையைப் பார்வையிட்டார். கடந்த ஆண்டு இந்துக்கள் குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாட வாய்ப்புகள் அதிகளவு கிடைக்கவில்லை. ஆனால், இவ்வாண்டு சில தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது என்பது இந்து மக்களுக்கு மகிழ்ச்சி தரும். இருந்த போதிலும் அனைவரும் எஸ் ஓ.பி யைக் கடைப்பிடிக்க வேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டார். மேலும் தீபாவளி சந்தையில் உள்ள வியாபரிகள், மக்கள் அதிகமாக வருகிறார்கள்; நல்ல வியாபாரம் எனக் கூறியுள்ளது மகிழ்ச்சியைத் தருகிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.



