
பக்காத்தானின் வேட்பாளராகும் தகுதி உள்ளதா இல்லையா என்பதை நிர்ணயிக்கும் அதிகாரம் மாநில அம்னோ தொடர்புக்குழுத் தலைவர், டத்தோஸ்ரீ முகமட் அலி முகமட் காட்டிலும் எனக்கு இல்லை என்று சுங்கை ஊடாங் சட்டமன்ற உறுப்பினர், டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஹருண் தெரிவித்தார். ஒருவேளை என்னையே வேட்பாளராகத் தேர்ந்தெடுத்தாலும் கூட எந்த தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் அதிகாரமும் எனக்கில்லை. அம்னோவிலிருந்து நீக்கப்பட்ட நானும் மற்றுமொரு சட்டமன்ற உறுப்பினரான டத்தோ நோர் அஸ்மான் ஹாசானும் (பந்தாய் குண்டோர்) பக்காத்தான் உறுப்புக் கட்சிகளில் உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொள்ளப்படுவோமா இல்லையா என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான பக்கத்தானின் தலைவர் மன்ற முடிவுக்காகக் காத்திருக்கிறோம் என்றார் அவர்
