
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிள்ளான் நகரில் லிட்டில் இந்தியா வர்த்தக மையத்திற்கு சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரி நேற்று சிறப்பு வருகை புரிந்தார். கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ, சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழ உறுப்பினர் வீ கணபதி ராவ், செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் உட்பட பல முக்கிய பிரமுகர்களும் கடைக்காரர்களும் டத்தோஸ்ரீ அமிருடின் சாரியை உற்சாகத்துடன் வரவேற்றனர். பின்னர் ஒவ்வொரு கடையாக சென்ற சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரிக்கு கடை உரிமையாளர்கள் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து பாராட்டினர்.

சிலாங்கூர் கோலாலம்பூர் இந்திய வர்த்தக சங்கத்தின் துணைத் தலைவர் தமிழ்ச் செல்வம், ஸ்ரீ குமரன் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர்கள் மோகன் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோரும் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரி உட்பட சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருக்கு மாலைகள் அணிவித்து சிறப்பித்தனர்.



