
நம் மனங்களில் உள்ள தீய எண்ணங்களைப் போக்கி நல்ல எண்ணங்களை மனத்தில் நிரப்பி, நல்வாழ்வு வாழ வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே தீபாவளி என்னும் தீபத் திருநாள் கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் தீபத் திருநாளை ஒற்றுமையுடனும், ஒருமிக்க கருத்துடனும் கொண்டாடுவோம் என்று மஇகாவின் தேசியத் தலைவர் மதிப்புமிகு டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச. விக்னேஸ்வரன் அவர்கள் பத்திரிகையில் விடுத்துள்ள தமது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். இந்தத் தீபாவளி நாளில் தங்களின் துன்பங்களும் துயரங்களும் நீங்கி செழிப்பான வாழ்வு வாழ்வதற்காகவும், தங்களது வாழ்க்கை தீபங்கள் போல் ஒளி வேண்டும் என்பதற்காகவும் தீபங்களை ஏற்றி இல்லங்களில் இறைவனை வணங்குகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.



