
நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடும் மலேசியர்களுக்கு மலேசிய இந்திய பெண்கள் கால்பந்து குழு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளது. பினாங்கு மாநில இந்தியர் விளையாட்டு பேரவைத் தலைவர் ஸ்ரீ சங்கர் தலைமையில் மலேசிய இந்திய பெண்கள் கால்பந்து குழு அமைக்கப்பட்டுள்ளது. மலேசிய கால்பந்து சங்கத்தின் துன் ஷரிபா பெண்கள் கால்பந்து லீக் போட்டியிலும் மலேசிய இந்திய பெண்கள் கால்பந்து லீக் போட்டியிலும் இக்குழு பங்கேற்கிறது. இவ்விரு போட்டிகளுக்கு தயாராகும் வகையில் மலேசிய இந்திய பெண்கள் கால்பந்து குழு அதிரடி படைக்க தயாராகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.