33.5 C
Kuala Lumpur
Saturday, June 13, 2026

Vetri

செயல்பட தவறிய வென்டிலேட்டரும், பிரதமரும்: ராகுல் காந்தி விமர்சனம்

🔥 Views : 10
👁 Reading Now : 68

பி.எம்.கேர்ஸ் நிதியத்தில் வாங்கப்பட்டு, பஞ்சாப் மாநிலத்தில் ஒரு ஆஸ்பத்திரிக்கு வழங்கப்பட்ட வென்டிலேட்டர்கள் செயல்படாமல் கிடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தநிலையில், இதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் நேற்று ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- பி.எம்.கேர்ஸ் வென்டிலேட்டருக்கும், பிரதமருக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. இரண்டிலுமே அளவுக்கு மிஞ்சிய பொய் பிரசாரம் காணப்படுகிறது. வென்டிலேட்டரும் தனது வேலையை செய்ய தவறிவிட்டது. பிரதமரும் தனது வேலையை செய்யவில்லை. தேவையான நேரத்தில் இருதரப்பையும் கண்டுபிடிப்பது கஷ்டம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles