
வரும் 20-ஆம் நாள் நடைபெற உள்ள மாநிலத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி வென்றால், மலாக்கா மாநிலத்தில் உள்ள பி-40 குடும்பத்தினருக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட மருத்துவ பாதுகாப்புத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்று பக்கத்தான் ஹரப்பான் உறுதி அளித்துள்ளது. சுகாதார பாதுகாப்பு அட்டை எனப்படும் காட் பெடூலி சிஹாட்’ மூலம் எளிய மக்களின் ஆரோக்கியத்திற்கு வழிகாணப்பட்ட அந்த சமூக நலத்திட்டத்தை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் அமல்படுத்துவோம் என்று முன்னாள் முதல்வரும் அமானா கட்சியின் உதவித் தலைவருமான அட்லி ஸஹாரி தெரிவித்துள்ளார். 2018 பொதுத் தேர்தலின்போது, நம்பிக்கைக் கூட்டணி சாதாரண பெரும்பான்மையுடன் மலாக்காவைக் கைப்பற்றியது. அப்போது, முதல்வராகப் பொறுப்பேற்றவர் அட்லி ஸஹாரி என்பது குறிப்பிடத்தக்கது.



