
மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் ரிம் தொகுதியில் மலாக்கா மாநில கெஅடிலான் இளைஞர் பிரிவு தலைவர் பிரசாத் குமார் பிரகாசம் போட்டியிடுகிறார். 26 வயதான இவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். ரிம் சட்டமன்ற தொகுதியில் என்னை வெற்றி பெற செய்யுங்கள். அனைத்து இன மக்களுக்கும் சிறந்த முறையில் சேவையை வழங்குவேன் என்று பிரசாந்த் குமார் அறிவித்துள்ளார். தற்போது பிரசாத் குமாரை ஆதரித்து செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ், கெஅடிலான் இளைஞர் பிரிவு உதவித் தலைவர் தீபன் சுப்பிரமணியம் உட்பட பக்கத்தான் ஹரப்பான் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.



