
தீவிரவாத கட்சிகளை புறக்கணிக்க பெரிக்கத்தான் நேஷனல் கட்சியுடன் இணைந்து பாஸ் போட்டிருக்கிறது என்று அதன் தலைவர் ஹாடி அவாங் கூறியிருப்பதை பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி கடுமையாக சாடினார். தீவிரவாத கட்சிகள் யார். அந்த கட்சியின் பெயரை குறிப்பிட என்ன தயக்கம். பாஸ் கட்சிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஸ் கட்சியை மக்கள் புறக்கணிப்பார்கள் என்று டாக்டர் இராமசாமி தெரிவித்தார்.



