31.8 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

மக்களிடையே நல்ல வரவேற்பு மலாக்காவில் மீண்டும் பக்கத்தான் ஹரப்பான் ஆட்சி மலரும் மாண்புமிகு டாக்டர் குணராஜ் நம்பிக்கை

🔥 Views : 6
👁 Reading Now : 54

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பானுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக சிலாங்கூர் மாநில செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தெரிவித்தார். ரிம் சட்டமன்ற தொகுதியில் கெஅடிலான் சார்பில் போட்டியிடும் பிரசாத் குமாரை ஆதரித்து டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். 2018 இல் நடைபெற்ற தேர்தலில் மலாக்கா மாநிலத்தில் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. 22 மாதத்தில் பக்கத்தான் ஹரப்பான் ஆட்சி கவிழ்ந்து. இருப்பினும் இந்த தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் மீண்டும் அமோக வெற்றி பெற்று மலாக்காவில் ஆட்சியை அமைக்கும் என்று டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles