
வரும் 2024 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டியை பாரிஸ் ஏற்று நடத்துகிறது. இந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்லும் மலேசியருக்கு பத்து லட்சம் வெள்ளி வெகுமதியை வழங்க Bt Nina Group நிறுவனம் முன்வந்திருக்கிறது. 100 ஆண்டு கால ஒலிம்பிக் வரலாற்றில் இதுவரை மலேசிய தங்கப்பதக்கம் வென்றதில்லை. அடுத்த ஒலிம்பிக் போட்டியில் மலேசியா தங்கப்பதக்கம் வெல்லும் வகையில் இந்த வெகுமதியை வழங்க அந்நிறுவனம் முன்வந்துள்ளது.



