
மலாக்காவில் அம்னோ வின் பாரம்பரிய தொகுதிகள் ஆட்டம் கண்டிப்பதாக கூறப்படுகிறது. மலாக்கா அம்னோ மாநில தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ராவூப் தஞ்சோங் பிடாரா தொகுதியில் மும்முனைப் போட்டியை எதிர்நோக்கியுள்ளார். இவரை எதிர்த்து பெர்சத்து சார்பில் துணை அமைச்சர் மாஸ் எமியார்த்தி மற்றும் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் ஜைனால் ஹசான் போட்டியிடுகிறார்கள். தஞ்சோங் பிடாராவில் போட்டி கடுமையாக இருப்பதால் இங்கு யார் வெற்றி பெறுவார் என்ற கணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் அம்னோ போட்டியிடும் இதர தொகுதிகளும் கடுமையான போட்டி ஏற்பட்டிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கோடி காட்டுகின்றன.



