
மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் இன்று 28 தொகுதிகளுக்கு வாக்களிப்பு நடைபெறுகிறது. காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வாக்களிப்பு நடைபெறும். மொத்தம் 4 லட்சத்து 95,196 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருக்கிறார்கள். வாக்களிப்பு முடிந்ததும் வாக்குகள் எண்ணப்படும். இன்று இரவு 10 மணிக்கு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு விடும் என்று மலாக்கா மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
