27.5 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

1 மணி நேரம் 25 நிமிடங்கள் தற்காலிக அமெரிக்க அதிபராக பதவி வகித்த கமலா ஹாரிஸ்!

🔥 Views : 4
👁 Reading Now : 47

தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபராக 1 மணி நேரம் 25 நிமிடங்கள் பதவி வகித்து புதிய வரலாறு படைத்திருக்கிறார் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வாஷிங்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பெருங்குடல் தொடர்பாக, மயக்கவியல் முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து சிகிச்சையில் இருந்து குணமாகும் வரை தனது அதிபருக்குள்ள அதிகாரத்தை துணை அதிபர் கமலா ஹாரிஸ்க்கு தற்காலிகமாக வழங்கி உத்தரவிட்டார். இதனையடுத்து அதிபர் பைடனுக்கு மயக்க மருந்து தந்து மருத்துவ சோதனை நடந்ததால் கமலாவுக்கு தற்காலிக அதிகாரம் தரப்பட்டது 1 மணி நேரம் 25 நிமிடங்கள் வரை தற்காலிக அமெரிக்க அதிபராக கமலா ஹாரிஸ் பதவி வகித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. வழக்கமான மருத்துவ பரிசோதனை முடிந்த பிறகு ஜோ பைடன் மீண்டும் அமெரிக்க அதிபர் பணியை தொடங்கினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles