26.4 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

சொத்தின் மதிப்பு 10 கோடி வெள்ளி என்பது எனக்கு தெரியாது!

🔥 Views : 7
👁 Reading Now : 29

முன்னாள் பிரதமர் என்ற முறையில் நிலத்திற்கு விண்ணப்பம் செய்தேன். அந்த நிலத்தின் மதிப்பு எனக்கு தெரியாது என்று டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் விளக்கம் அளித்துள்ளார். முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் 10 கோடி வெள்ளி மதிப்புள்ள வீடு, நிலம், சொத்தை வெகுமதி யாக கோரி அரசாங்கத்துக்கு விண்ணப்பம் செய்த சம்பவம் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நிதியமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு ஷப்ருல் இதை நாடாளுமன்றத்தில் வெளிப்படையாக தெரிவித்தபோது டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், துன் டாக்டர் மகாதீர் முகமட் உட்பட பக்கத்தான் ஹரப்பான் எம்பிக்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர். இந்த நிலத்திற்கான விண்ணப்பத்தை மீட்டுக் கொள்வதாக நேற்று டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அறிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles