26.4 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

மலாக்காவில் ஆட்சி அமைக்க போவது யார்? இன்றிரவு 10.00 மணிக்குள் முடிவுகள் தெரிந்து விடும்

🔥 Views : 7
👁 Reading Now : 58

12 நாள் மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்த வேளையில் இன்று புதிய மாநில அரசாங்கத்தை தேர்வு செய்ய மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். 28 தொகுதிகளில் காலை 8.00 மணிக்கு வாக்குச்சாவடிகள் திறக்கப்பட்டபோது மலாக்கா மாநில மக்கள் வரிசைப் பிடித்து வாக்களித்தனர். பக்கத்தான் ஹரப்பான் சார்பில் முதல்வர் வேட்பாளர் அட்லி தன் மனைவியுடன் வந்து டுரியான் துங்கால் தேசியப் பள்ளியில் வாக்களித்தார். இன்று நடக்கும் மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார். இதனிடையே மாலை 6.00 மணிக்கு மேல் வாக்குகள் எண்ணப்படும். இரவு 10.00 மணிக்குள் வாக்குகள் எண்ணப்பட்டு விடும் என்பதால் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது தெரிந்து விடும் என்று மலாக்கா மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles