
கெடா மாநிலத்தில் இளம் மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி போட்டி அண்மையில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆறுமுகம் பிள்ளை தமிழ்ப்பள்ளி வாகை சூடியது. வெல்லசெலி தமிழ்ப் பள்ளி இரண்டாம் இடத்தைப் பிடித்த வேளையில் ஹெண்ரிட்டா தமிழ்ப் பள்ளி 3ஆவது இடத்தை பிடித்தது. கணேசர் தமிழ்ப்பள்ளி மற்றும் பெடோங் தமிழ்ப்பள்ளி 4,5ஆவது இடங்களைப் பிடித்தது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கெடா மாநில பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் எம் கருப்பையா தலைமையில் வெகுமதி வழங்கி சிறப்பிக்கும் பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்ப் பள்ளி மாணவர்கள் மத்தியில் அறிவியல் பாடத்தை ஊக்குவிக்கும் வகையில் இப்போட்டி நடத்தப்பட்டது.


