28.8 C
Kuala Lumpur
Tuesday, June 2, 2026

Vetri

பினாங்கு மாநில அரசாங்கத்துடன் கலை கலாச்சார இயக்கம் முக்கிய சந்திப்பு நடத்தியது

🔥 Views : 11
👁 Reading Now : 41

பினாங்கு மாநிலத்தில் துடிப்புடன் செயல்பட்டு வரும் பினாங்கு கலை கலாச்சார இயக்கத்தின் தலைவர் பால் நம்பியார் தலைமையில் பினாங்கு மாநில அரசாங்கத்துடன் சிறப்பு சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. பினாந்தி தோட்டத்தில் 80 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயமாகக் கருதப்படும் பினாந்தி அருள் மிகு ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய நில விவகாரம்,இந்திய மாணவர்கள் கல்வி,பொருளாதார நிலையில் இந்தியர்கள் வேலை வாய்ப்புகள் விளையாட்டுத் துறையில் இந்திய இளைஞர்களின் ஈடுபாடு போன்ற பல பிரச்சனைகள் குறித்து பினாங்கு மாநில முதலமைச்சர் உதவியும் ஒத்துழைப்பும் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை முன் வைக்கப்பட்டதாக அவர் சொன்னார். பினாங்கு மாநில முதல்வர் செள கூன் இயோ மற்றும் துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் இராமசாமி ஆகியோர் மாநில மக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்றி வருகிறார்கள் என்று பாலநம்பியார் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles