
சிலாங்கூர் மாநில அரசின் 2022 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என்று மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி குறிப்பிட்டார். இந்த பட்ஜெட்டை மீடியா சிலாங்கூர் வாயிலாக நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று அவர் சொன்னார். சிலாங்கூர் மாநில பட்ஜெட் மாநில பொருளாதாரத்திற்கு புத்துயிரூட்டுவதற்கும் அதனை மீட்சியுறச் செய்வதற்கும் மேற்கொள்ளப்படும் திட்டங்களை அறிந்து கொள்ள இந்நிகழ்வை தவறாது காணுங்கள் என்று அவர் சிலாங்கூர் மாநில மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.



