
மலேசிய சூப்பர் லீக் கிண்ண கால்பந்து போட்டி மற்றும் பரதன் கிண்ண கால்பந்து போட்டியில் அதிரடி படைத்த குட்வில் கால்பந்து கிளப் மீண்டும் வெட்ரன் கிண்ணப் போட்டியில் களம் இறங்க காத்துக் கொண்டிருக்கிறது. மிக விரைவில் வெட்ரன் லீக் கிண்ண போட்டிகளில் பங்கேற்க குட்வில் கிளப் தயாராகி வருகிறது என்று அதன் தலைவர் புவியரசன் தெரிவித்தார். முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரரான புவியரசன் தலைமையில் தற்போது குட்வில் கிளப் வெற்றி நடை போடுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற விருந்து நிகழ்ச்சிக்கு தலைமையேற்ற புக்கிட் கியாரா மண்ணின் மைந்தர் மனோ பரமசிவம் தனது சார்பில் ஒரு ஜெட் ஜேர்சியை அன்பளிப்பு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மலேசிய சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் பங்கேற்று வரும் பெட்டாலிங் ஜெயா சிட்டி கிளப்பின் தலைமை இயக்குனர் கணேஷ் சிறப்பு வருகை புரிந்து குட்வில் கிளப்பை வாழ்த்தினார். குட்வில் கிளப் கால்பந்து கிளப்புக்கு எங்களின் ஆதரவு தொடரும் என்று கணேஷ் தெரிவித்தார்.



