
நாட்டில் நேர்மையற்ற மற்றும் ஊழல் நிறைந்த அரசியல் தலைவர்களுக்கு எதிராக, புதிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறலாம் என்று பெர்சே அமைப்பின் முன்னாள் இணை தலைவரும் மலேசிய வழக்கறிஞர்கள் மன்றத்தின் முன்னாள் தலைவருமான டத்தோ அம்பிகா ஶ்ரீனிவாசன் கோடிக் காட்டியுள்ளார். நாட்டிற்கு நல்ல தலைவர்கள் வேண்டும் என்று மக்கள் கோருவதற்கான காலம் நெருங்கிவிட்டது. என்று பெர்சே அமைப்பின் 15- ஆவது நிறைவு ஆண்டு நிகழ்ச்சியின்போது அவர் அதனை குறிப்பிட்டுள்ளார்.. பெர்சே, ஊழலுக்கு எதிராகவும், தேர்தல் சீரமைப்புகளை கோரியும் இதுவரை ஐந்து முறை பேரளவில் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


