28.5 C
Kuala Lumpur
Monday, June 15, 2026

Vetri

டிசம்பர் 18ஆம் தேதி சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தல்

🔥 Views : 10
👁 Reading Now : 59

சரவாக் மாநில 12ஆவது சட்டமன்றத் தேர்தல் டிசம்பர் 18 ஆம் தேதி நடைபெறும் என்று சரவாக் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. வரும் டிசம்பர் 6 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நடைபெறும். டிசம்பர் 14ஆம் தேதி முன்கூட்டியே வாக்களிப்பு இடம் பெறும். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 12 தினங்களுக்கு பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கப்படுவதாக சரவாக் மாநில தேர்தல் ஆணையத்தின் தலைவர் டத்தோ அப்துல் கனி சாலே தெரிவித்தார். மொத்தம் 82 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. சரவாக் மாநில ஜிபிஎஸ் கஞ்சியை எதிர்த்து பக்கத்தான் ஹரப்பான் அனைத்து இடங்களிலும் போட்டியிடுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles