
காப்புறுதியை வைத்திருக்காத வாகனமோட்டிகளுக்கு எதிராக இன்று முதல் ஜேபிஜே எனப்படும் போக்குவரத்து துறை இலாகா நாடு முழுவதும் அதிரடி சோதனையில் இறங்குகிறது. குறிப்பிட்ட இடங்களில் சாலை தடுப்புகளை ஏற்படுத்தி அந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று ஜேபிஜே தலைமை இயக்குநர் ஜைலானி தெரிவித்தார். வாகன காப்புறுதி வைத்திருக்காத வாகனமோட்டிகளுக்கு எதிராக 1,000 வெள்ளி அபராதமும், 12 மாதங்களுக்கு வாகனமோட்டும் அனுமதியையும் முடக்க முடியுமென அவர் இன்று தெரிவித்தார்.


