
பக்கத்தான் ஹரப்பானுக்கு தொடர்ந்து டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைவராக இருப்பதை பக்கத்தான் தலைவர்கள் மன்றம் முடிவு செய்யட்டும் என்று ஜொகூர் மாநில ஜசெக துணை தலைவர் ஜிம்மி புவா கேட்டுக் கொண்டுள்ளார். மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் கண்ட தோல்வியை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதேசமயம் இந்த தோல்வி தொடர்பில் முன் வைக்கப்படும் கருத்துகளுக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். தொடர்ந்து பக்கத்தான் ஹரப்பானுக்கு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைவராக இருப்பதை பக்கத்தான் ஹரப்பான் தலைவர்கள் மன்றம் முடிவு செய்யட்டும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


