
கருத்துக்களை முன் வைக்கும் போது ஆணவத்துடன் நடந்து கொள்ள வேண்டாம் என்று பக்கத்தான் ஹரப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார். மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் கண்ட தோல்வியால் பக்கத்தான் தலைவர் பதவியில் இருந்து நான் விலக வேண்டும் என்று கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. முன்வைக்கப்படும் எல்லாம் கருத்துக்களையும் நாங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்வோம் இருப்பினும் கருத்துக்களை முன்வைக்கும் போது ஆணவத்தோடு நடந்து கொள்ளக் கூடாது. இது நன்மையைத் தேடித் தராது என்று அவர் சுட்டிக்காட்டினார். நான் என் கடமையிலிருந்து ஓடிவிட மாட்டேன். மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பானின் அடைவு நிலைக்கு நான் பொறுப்பேற்று கொள்கிறேன் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டுள்ளார்.


