
நாட்டில் கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வரை 97.5 விழுக்காட்டு ஆசிரியர்கள் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளதாக நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும் 99.04 விழுக்காட்டு ஆசிரியர்கள் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக துணைக் கல்வியமைச்சர் டத்தோ டாக்டர் மா ஹாங் சூன் தெரிவித்தார். பொதுச் சேவைத் துறை வெளியிட்ட உத்தரவின் படி தடுப்பூசி பெற மறுக்கும் ஆசிரியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் சுட்டிக்காட்டினார். கோவிட்-19 தடுப்பூசி பெற மறுக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை குறித்து சரவாக் சரிக்கேய் தொகுதி பக்கத்தான் உறுப்பினர் வோங் லிங் பியு எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.



