
வரும் பொதுத்தேர்தலில் 18 வயதினர் வேட்பாளர் ஆக்குவதற்கு மாநில சட்டத்தை திருத்துவதற்கு மாநில மந்திரி பெசார் மற்றும் மாநில முதல்வர் ஒப்புதல் வழங்கி இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று தெரிவித்தார். நேற்று நடைபெற்ற மந்திரி பெசார் மற்றும் முதல்வர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் சட்டத்தை திருத்துவதற்கு ஒப்புதல் வழங்கியதாக அவர் சொன்னார். அந்த வகையில் வரும் பொதுத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் 18 வயதினர் வேட்பாளர் ஆக்குவதற்கு மாநில சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் என்று அவர் சொன்னார்.



